📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 14, 2026 02:04 PM

சிங்கப்பூர் ஆலயங்களில் நவராத்திரி விழா கோலாகலம்

சிங்கப்பூர் ஆலயங்களில் நவராத்திரி விழா கோலாகலம்

சிங்கப்பூர் ஆலயங்களில் நவராத்திரி விழா கோலாகலம் தீமை மீது நன்மை பெற்ற வெற்றியைக் கொண்டாடவும் அன்னை பராசக்தியைப் போற்றவும் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 11 முதல் விழா நடைபெறும். இந்த நாட்களில் சிங்கப்பூரில் அன்னையின் ஆட்சி அமோகமாக நடைபெறும். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் தூங்கா நகராக விளங்கும் சிங்கப்பூரில் இந்த நாட்களில் பக்திப் பரவசம் விஸ்வரூபமெடுக்கும். தோல் கருவிகள் - துளைக் கருவிகள் - மிடற்றுக் கருவிகளின் தாள லய சங்கீத சம்மேளனம் எங்கெங்கும் கொடி கட்டிப் பறக்கும். முதல் நாள் ஆலயங்களின் ஆஸ்தான நாதஸ்வர - தவில் வித்துவான்களின் கச்சேரியோடு தொடங்கும் விழாவில் ஒவ்வொரு நாளும் பல்துறை வித்தகர்களின் இசை சாம்ராஜ்யத்தில் பக்தர்கள் நனைந்து மகிழ்வர். சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்திலும் கேளாங் கிழக்கு ஸ்ரீ சிவன் கோயிலிலும் நடைபெற்ற விழாக்களைக் கண்டு மகிழுங்கள் - நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்