📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 14, 2026 07:05 PM

செயற்கை நுண்ணறிவு இலவசப் பயிலரங்கு

செயற்கை நுண்ணறிவு இலவசப் பயிலரங்கு

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் ஏற்பாட்டில் தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில், 11 அக்டோபர் 2026 அன்று சிங்கப்பூரில் விக்டோரியா சாலையில் அமைந்துள்ள தேசிய நூலகத்தில் “அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் இலவசப் பயிலரங்கு நடைபெற்றது.சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற செயற்கை நுண்ணறிவுப் பொறியாளர்களான அ. முஹம்மது மாதிஹ் மற்றும் குகனவேல் அசோக் குமார் இருவரும் சிறந்த உதாரணங்களுடன் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் இப்பயிலரங்கை நடத்தினர். ஏறக்குறைய 100 பேர் கலந்துகொண்டனர். கடந்த 16 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கல்வி சார்ந்த சமூக நலப்பணிகளையாற்றி வரும் இச்சங்கம் இதுவரை 158 நிகழ்ச்சிகளை நடத்தி சாதனைப் படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்