📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 03:04 PM

சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம்; திமுக பங்கேற்காதது மிகுந்த ஏமாற்றம்

சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம்; திமுக பங்கேற்காதது மிகுந்த ஏமாற்றம்

சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற முக்கிய உரிமைகள் சார்ந்த பிரச்சினையில் திமுக பங்கேற்காமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தனித்தீர்மானம்

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்ட பணியில், மாநில-மத்திய அரசுகளால் அறிவிக்கை செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களைக் கணக்கெடுப்பு செயலியில் முன்னரே பதிவேற்றம் செய்து துல்லியமான விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றும், குழப்பத்தை ஏற்படுத்தும் 'திறந்தவெளிப் பதிவு முறையை' கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித்தீர்மானத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்!

மகிழ்ச்சியளிக்கிறது

திமுகவினர் வெளிநடப்பு

​இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் இத்தீர்மானம் முன்னரே இடம்பெற்றிருந்தும், அதை நன்கு அறிந்திருந்தும் நேற்றைய விவகாரத்தை சாக்காக வைத்து வெளிநடப்பு செய்ததன் மூலம், ஓபிசி இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற முக்கிய உரிமைகள் சார்ந்த பிரச்சினையில் திமுக பங்கேற்காமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.