📅 Monday, 07 September 2026 IST | ஆவணி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 07, 2026 03:00 PM

Bigg Boss Tamil 10: விஜய் சேதுபதியை கவர்ந்த ஜாலி பேச்சு... யார் இந்த முகேஷ்?

Bigg Boss Tamil 10: விஜய் சேதுபதியை கவர்ந்த ஜாலி பேச்சு... யார் இந்த முகேஷ்?

Bigg Boss Tamil 10: விஜய் சேதுபதியை கவர்ந்த ஜாலி பேச்சு... யார் இந்த முகேஷ்?

Mukesh Bigg Boss: பிக் பாஸ் தமிழ் 10 சீசன் நேற்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது. தொடக்க விழாவில் நேரலை பார்வையாளர் வாக்கெடுப்பு மூலம் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்களில் ஒருவர் முகேஷ். இவரைப் பற்றி பார்ப்போம்.

முகேஷ் யார்?

முகேஷ் நடிகர், நடனக் கலைஞர் மற்றும் இணைய உள்ளடக்க உருவாக்குநராக இருக்கிறார். சமூக வலைதளங்களிலும் தனது படைப்புகள் மூலம் கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக நடு சென்டர் வெப் தொடரில் காளிதாஸ் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது அவரது திரை அடையாளத்தை வலுப்படுத்தியது. இளம் தலைமுறையை அவருக்கு மையமாகக் கொண்ட இந்தத் தொடரின் மூலம் கூடுதல் பார்வையாளர்கள் கிடைத்தனர். பிக் பாஸ் தமிழ் 10-ன் தொடக்க நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் அறிமுகம் வழக்கமான முறைவிட வித்தியாசமாக அமைந்தது.

பாஸ் பிக் பாஸ் 10 போட்டியாளர்

நேரலை அரங்கில் இருந்த பார்வையாளர்களின் வாக்கெடுப்பும் போட்டியாளர்களின் பயணத்தை தீர்மானிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பலர் தொடக்கத்திலேயே வெளியேறிய நிலையில், முகேஷ். பிக் பாஸ் இல்லத்திற்குள் செல்லும் வாய்ப்பை பெற்றார். முகேஷின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் அவரது பொழுதுபோக்கு திறன். நடனம், நடிப்பு மற்றும் நகைச்சுவையான அணுகுமுறை ஆகியவை பிக் பாஸ் போன்ற நேரலை மற்றும் தனிப்பட்ட ஆளுமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியில் அவருக்கு பலமாக அமையலாம்.

முகேஷ் வாழ்க்கை பின்னணி

விஜய் சேதுபதியுடன் தொடக்க மேடையில் அவர் வெளிப்படுத்திய கலகலப்பான அணுகுமுறையும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று கூறலாம். பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற பிறகு, திரையில் நடித்த கதாபாத்திரங்களைத் தாண்டி முகேஷின் உண்மையான ஆளுமை எப்படி இருக்கும் என்பதுதான் ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே நாடு சென்டர் மூலம் இளம் ரசிகர்களிடம் அறிமுகமான அவர், பிக் பாஸ் தமிழ் 10 மூலம் தனது ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்துவாரா என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.