அதிமுக ஆட்சிக்கு வரும் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்க வேண்டும்
அதிமுக ஆட்சிக்கு வரும் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். இது தொடர்பாக, கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கம்
வெற்றி பெற்றோம்
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி
கட்சி நல்லா இருக்க வேண்டும். அண்ணா திமுக எங்களுடைய கட்சி, 1972-இல் எம்.ஜி.ஆர். உருவாக்கினார்; ஜெயலலிதா பாதுகாத்து வந்தார். அதிமுக எங்கள் இயக்கம், நாங்கள் எங்கேயும் செல்லவில்லை, இங்கேயே தான் இருக்கிறோம்; மக்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறேன். கோவை மாவட்டத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்தது அதிமுக தான், கடந்த 50 ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியைத் தந்துள்ளோம். இந்த இயக்கம் தான் எங்களுக்குப் பதவிகளை கொடுத்தது. ஆனால், தற்போது அதிமுகவின் செல்வாக்கு தாராபுரம், மதுராந்தகத்தில் குறைந்து, வாக்குகளும் சரிந்துள்ளன.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டி.டி.வி. தினகரன் 20 இடங்கள் (சீட்டுகள்) கேட்டார். அவர்களும் அன்று உள்ளே இருந்திருந்தால், 2021-லேயே மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைந்திருக்கும். அதேபோல, 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் 4 மத்திய மந்திரிகளை உருவாக்கியிருக்கலாம். நாம் நிறைய கூட்டணிகளை இழந்துவிட்டோம், அதெல்லாம் இருந்திருந்தால் கட்சி இன்று வலுவாக இருந்திருக்கும். வெளியில் போனவர்கள், பிரிந்து போனவர்கள் அனைவரையும் பொதுச் செயலாளர் அரவணைத்து செல்வார் என நம்புகிறோம்.
தாராபுரம் தொகுதி குண்டடம் பகுதி எப்போதும் நம்முடைய கோட்டை ஆகும். ஆனால், இந்த முறை வாக்குகள் குறைவாக வந்துள்ளன. நம்முடைய தொண்டர்கள் பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர், பேரூராட்சி மன்ற தலைவர் என உள்ளாட்சியில் பொறுப்புக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருந்தார்கள். நமக்குக் கீழே இருக்கும் தொண்டர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இரட்டை இலைக்கு வாக்களித்தார்கள்.
அதிமுக பலப்படும், ஜெயலலிதா நினைத்தது போல் தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கு வரும். பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்; பொதுச் செயலாளர் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. பிரச்சினைகளை ஆராய்ந்து, எல்லாரையும் அரவணைத்து ஒன்று சேர்த்து கட்சியை அவர் பலப்படுத்துவார் என நம்புகிறோம்.
அண்ணன் செங்கோட்டையனிடம் தான் இதை பற்றி கேட்க வேண்டும். செங்கோட்டையன் தவெக-விற்குச் செல்வதற்கு அவருக்கு ஏதோ ஒரு வலுக்கட்டாயமான சூழல் ஏற்பட்டுள்ளது. சசிகலா, டி.டி.வி. தினகரன் என அனைவரையும் கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இவ்வாறு அதில் தெரிவித்தார்.