📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 24, 2026 08:05 AM

அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் ரெய்டு

அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் ரெய்டு

அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் ரெய்டு

*கணக்கில் வராத ரூ.15,100 சிக்கியது

*லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

திருச்சி : திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 2 பேரிடம் கணக்கில் வராத ரூ.15,100 பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாக அலுவலகத்தில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதனையடுத்து திருச்சி பாலக்கரை அருகேயுள்ள மாநகராட்சி 2வது மண்டல அரிமங்கலம் கோட்ட அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சக்திவேல் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

மதியம் 3 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது.சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில், உதவி திட்ட அதிகாரி ஒருவரிடமிருந்து ரூ.12,800, டிரைவரிடமிருந்து ரூ.2,300 என மொத்தம் கணக்கில் வராத ரூ.15,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர்.