📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 14, 2026 11:04 AM

அபிஷேக் சர்மா ரெக்கார்டை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்.. விராட் கோலி வரிசையில் புதிய வரலாறு

அபிஷேக் சர்மா ரெக்கார்டை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்.. விராட் கோலி வரிசையில் புதிய வரலாறு

அபிஷேக் சர்மா ரெக்கார்டை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்.. விராட் கோலி வரிசையில் புதிய வரலாறு

ராவல்பிண்டி: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ந்து 3 போட்டிகளிலும் அரைசதம் விளாசிய பாகிஸ்தான் கேப்டன் சாஹிப்ஸாதா ஃபர்ஹான், இந்திய அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவின் உலக சாதனையைத் தகர்த்தெறிந்துள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரை, பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கேப்டனாக முதல்முறையாகக் களமிறங்கிய சாஹிப்ஸாதா ஃபர்ஹான், தொடக்க வீரராகக் களமிறங்கி மூன்று போட்டிகளிலுமே அரைசதம் அடித்து சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தினார்.

முதல் ஆட்டத்தில் 53 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த அவர், அடுத்த இரண்டு போட்டிகளில் முறையே 73 மற்றும் 76 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மொத்தம் 238 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்தார்.

முன்னதாக கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 229 ரன்கள் குவித்ததே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு டி20 தொடரில் ஒரு வீரரின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. அந்த இமாலய சாதனையை தற்போது சாஹிப்ஸாதா ஃபர்ஹான் முறியடித்துள்ளார். நியூசிலாந்தின் காலின் முன்ரோ 223 ரன்களுடனும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 217 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேலும் ஒரு இருதரப்பு டி20 தொடரின் மூன்று போட்டிகளிலுமே 50 ரன்களுக்கு மேல் குவித்த முதல் பாகிஸ்தான் பேட்டர் என்ற பெருமையையும் ஃபர்ஹான் பெற்றார். உலகளவில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக இந்த மைல்கல்லை எட்டிய 8-வது வீரராகவும் அவர் இணைந்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி முதன்முறையாக இந்த சாதனையைப் படைத்தார். அவருக்குப் பின் காலின் முன்ரோ, டேவிட் வார்னர், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் இந்த சாதனையைச் செய்துள்ளனர். கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே அடுத்தடுத்து சாதனைகளை முறியடித்த சாஹிப்ஸாதா ஃபர்ஹானுக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.