Anbil Avan X Review
சென்னை: கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் அன்பில் அவன் திரைப்படம் இன்று வெளியாகவிருக்கிறது. நேற்று சென்னையில் வைத்து சிறப்பு காட்சியும் திரையிடப்பட்டது. அதில் படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸே கிடைத்திருக்கிறது. இந்நிலையில் அன்பில் அவன் எக்ஸ் விமர்சனம் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். அவர் இப்போது கார்த்திகேயன் இயக்கத்தில் அன்பில் அவன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. நேற்றைய சிறப்பு காட்சியில் படத்துக்கு ஏகோபித்த ஆதரவே கிடைத்தது. எனவே அதே ரெஸ்பான்ஸ் இன்று தியேட்டர்களிலும் கிடைக்குமா என்ற ஆவல் படக்குழுவினரிடம் எழுந்திருக்கிறது.
அன்பில் அவன் எக்ஸ் விமர்சனம்: படம் பார்த்த ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அன்பில் அவன் முதல் பாதி நன்றாக இருக்கிறது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் பணியாற்றும் அசோக் மற்றும் ப்ரீத்தி, முறையே பேக் என்ட் மற்றும் ஃப்ரண்ட் என்ட்டில் வேலை செய்கிறார்கள். திடீரென அவர்கள் தங்களது வேலையை விட்டுவிட்டு கனவுகளை நோக்கி பயணமாகிறார்கள். அடுத்து என்ன நடக்கிறது? என்பது கதை. இடைவேளையை நெருங்கும்போது பதற்றம் அதிகரிக்கிறது. அதோடு படத்தின் ஜானரும் மாறுகிறது. இசையும் சிறப்பு" என குறிப்பிட்டிருக்கிறார்.
கெமிஸ்ரி சூப்பர்: இன்னொருவர், "அன்பில் அவன் காதல், உணர்வு, ஆக்ஷன் ஆகியவற்றை புத்துணர்ச்சியுடன் கலந்து கொடுத்திருக்கிறது. ஒரு இளம் காதல் ஜோடி தங்களுடைய கனவு திட்டத்துக்காக மலை பிரதேசம் ஒன்றுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு எதிர்பாராத தடை ஏற்படுகிறது. படத்தின் மையமாக காதல் இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்த்துகின்றன. அசோக் செல்வன் இயல்பான, நம்ப வைக்கும் நடிப்பை வழங்கியிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தன் தனது நடிப்பில் அழகையும், ஆழத்தையும் கொண்டு வந்திருக்கிறார். கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ஆக்ஷன் காட்சிகள் படத்தின் முக்கிய ஹைலைட்டாக இருக்கின்றன. இயக்குநர் கார்த்திக் காதலையும், ஆக்ஷனையும் சமநிலையோடு அணுகியிருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் இசை உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு கூடுதல் உயிரோட்டத்தை கொடுக்கிறது. மொத்தத்தில் அன்பில் அவன் சுவாரஸ்யமான காதல் - ஆக்ஷன் என்ட்டெர்டெயினர்" என புகழ்ந்திருக்கிறார்.
திருப்தி வருகிறது: மற்றொருவர், "அன்பில் அவன் திரைப்படம் காதலுடன் தொடங்கி உணர்வுகளை அதிகரித்து பிறகு ஆக்ஷனில் வேகம் எடுக்கிறது. சூர்யா கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தனும் இயல் கேரக்டரில் அழகாக நடித்திருக்கிறார். இடைவேளை காட்சி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இரண்டாவது பாதியில் பதற்றமும், விறுவிறுப்பும் கூடுகிறது. க்ளைமேக்ஸில் எமோஷன் மற்றும் நல்ல எலிவேஷன் கிடைத்து திருப்தி வருகிறது.
தொழில்நுட்ப ரீதியாக படம் வலுவாக இருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசை உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. கௌதமின் ஒளிப்பதிவு சிறப்பு. எடிட்டர் செல்வாவின் கச்சிதமான எடிட்டிங்கும் நன்றாக இருக்கிறது. இது ஒரு புத்துணர்ச்சியான காதல் - ஆக்ஷன் பயணம்" என கொண்டாடியிருக்கிறார்.