📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 14, 2026 08:01 AM

அக்டோபர் 19 ஆம் தேதி அறிமுகமாகும் LIC யின் 3 புதிய பிளான்களின் முழு விவரங்கள்

அக்டோபர் 19 ஆம் தேதி அறிமுகமாகும் LIC யின் 3 புதிய பிளான்களின் முழு விவரங்கள்

LIC தனது வாடிக்கையாளர்களுக்காக மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த இருக்கின்றது. இந்த மூன்று திட்டங்களும் பங்குசந்தை சாராத திட்டங்களாம். எனவே இந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணம் பங்குசந்தையில் முதலீடு செய்யப்படாது. அதுமட்டுமல்லாமல் இவற்றின் வருமானம் என்பது LIC போனஸ் அறிவிப்புகளை சார்ந்தும் இருக்காது. பாலிசி எடுக்கும்போதே உங்களுக்கான நன்மைகள் முதல் அனைத்தும் முடிவு செய்யப்படும். அந்த மூன்று திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்LIC நியூ ஜீவன் தாரா-II (Plan 892)இது ஒரு ஆயுட்கால உத்தரவாத ஓய்வூதிய திட்டமாகும். மேலும் இது ஒரு Deferred Annuity திட்டமும் கூட.இதில் நீங்கள் குறிப்பிட்ட காலம் வரை பிரீமியம் செலுத்த வேண்டும். அதன் பின் Deferment Period முடிந்த பிறகு வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படும்.இதில் ஒரே முறையில் மொத்தமாகவோ அல்லது வழக்கமான தவணைகளிலோ பிரீமியம் செலுத்தலாம்.உங்களுக்கு மட்டும் (Single Life) அல்லது தம்பதியருக்கான (Joint Life) ஓய்வூதிய தேர்வை தேர்ந்தெடுக்கலாம்டாப் அப் வசதியும் உண்டு. அதாவது ஒத்திவைப்பு காலத்தில் கூடுதல் பிரீமியம் செலுத்தி ஓய்வூதிய தொகையை அதிகரிக்கும் வசதியும் உண்டுLIC ஹெல்த் ஷீல்ட் (Plan 907)இது ஒரு நிலையான நன்மைகளை வழங்கும் மருத்துவ காப்பீடு திட்டமாகும். வழக்கமான இன்சூரன்ஸ் போல மருத்துவமனை பில்களுக்கு பணம் தராமல் இது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நிலையான தொகையை வழங்கும்மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் பணம் கிடைக்கும். பெரிய சிகிச்சைக்கான செலவுகளை ஒரே தவணையாக வழங்கும்.இந்த ஒரே பாலிசி மூலம் குடும்பம் முழுவதும் பயன் பெறலாம்LIC கேன்சர் கவர் (Plan 908)LIC யின் இந்த கேன்சர் கவர் (Plan 908) திட்டம் என்பது ஆரம்பகட்ட புற்றுநோய் அல்லது தீவிரமான புற்றுநோய் சிகிச்சைக்கான நிதி பாதுகாப்பை வழங்குகின்றது.புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீடு தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை உடனே வழங்கப்படும். மேலும் தீவிரமான புற்றுநோய் கண்டறியப்பட்டால் அடுத்த சில ஆண்டுகளுக்கு நிலையான மாதாந்திர வருமானமும் வழங்கப்படும். தீவிரமான புற்றுநோய் கட்டத்திற்கு பிறகு இருக்கும் அனைத்து பிரீமியமும் தள்ளுபடி செய்யப்படும்