📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 15, 2026 09:04 AM

அஜித்தின் சினிமா வாழ்க்கை முடிஞ்சு போச்சு.. முகத்தில் சோர்வு.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!

அஜித்தின் சினிமா வாழ்க்கை முடிஞ்சு போச்சு.. முகத்தில் சோர்வு.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமார், தற்போது படங்களை தாண்டி சர்வதேசக் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தனது கார் பந்தய அணிக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனக் கோரி அஜித் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர் அஜித்துக்கு ஆதரவு அளிப்பதற்கு பதிலாக, மன்னிக்கவும் தல... எங்களுக்கு இப்போ நேரம் இல்லை, நாங்க குடும்பத்தை பார்க்கணும் என அஜித்தின் பழைய பேச்சையே வைத்து அவரை கலாய்த்து மீம்ஸ்களை பதிவிட்டனர்.

அவருக்கே பேக் ஃபயர்: இது சோசியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பி இருக்கும் நிலையில், இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் சேகுவேரா யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அஜித்தை பற்றிய விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், அவருடைய தற்போதைய நிலையை பார்க்கும்போது எனக்கு ரொம்பவே வேதனையாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களின் அன்பை பெற்ற ஒருவர், தனது பந்தய அணிக்கு ஆதரவு கேட்கும்போது அவருடைய சொந்த ரசிகர்களே கிண்டல் செய்வது வருத்தமளிக்கிறது. குடும்ப நிகழ்வுகளில் ரசிகர்கள் தலையிட கூடாது என அஜித் சொல்வது சரிதான். ஆனால், அவர் கார் பந்தயத்திற்குச் செல்வது பொதுவெளியில் நடக்கும் நிகழ்ச்சியில் அவரை போட்டோ எடுப்பதும் இயல்பானதுதான். ஆனால், அந்த இடங்களில் கூட அவர் ரசிகர்களிடம் ரொம்பவே கடுமையாக நடந்து கொண்டார். அதுதான் இப்போது அவருக்கே பேக் ஃபயர் ஆகியிருக்கிறது.

காரணமே இதுதான்: முன்பு அமர்க்களம், அட்டகாசம் படங்களில் பார்த்த அஜித்தின்அந்த உற்சாகமான முகத்தையும், சிரிப்பையும், தன்னம்பிக்கையையும் இப்போ பார்க்கவே முடியல. விடாமுயற்சி படம் தோல்வி அடைந்ததற்குக் காரணமே இதுதான். இப்போது அஜித்தின் முகத்தில் ஏதோ ஒரு சோர்வும், மனதில் ஏதோ ஒரு பெரிய சுமையும் இருப்பது போல தெரிகிறது. அவர் ரசிகர்களிடம் நடந்து கொண்ட விதம் தற்போது அவருக்கே எதிராகிவிட்டது. எனக்கு தெரிந்து அஜித்தின் சினிமா வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது என்று சேகுவேரா பேசி உள்ளார். ஒருதரப்பினர் அஜித்தின் கார் பந்தய முயற்சிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், பத்திரிகையாளர் சேகுவேராவின் இந்த விமர்சனம் அஜித்தின் தீவிர ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.