World News
May 27, 2026 05:30 PM
காங்கோ: எபோலாவுக்கு 220 பேர் பலி? பெருந்தொற்றின் தொடக்கம் என மந்திரி அச்சம்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், எபோலா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த பாதிப்புக்கு 220 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதுபறி சுகாதார மந்திரி ரோஜர் கம்பா கூறும்போது, தொற்றுகளும், மரணங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சந்தேகத்திற்குரிய வகையில் ஆயிரம் பேரை கண்டறிந்து உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
World News