📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 14, 2026 10:31 PM

2031க்குள் 20,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்: தமிழக அரசு முடிவு

2031க்குள் 20,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்: தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டைப் பெருமளவில் ஊக்குவிக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் சார்ஜிங் உள்கட்டமைப்பை அதிரடியாக விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மின்சார வாகன சார்ஜிங் வசதிகளுக்கு தனியாக துணை மின்மீட்டர் அமைக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநிலம் முழுவதும் வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. கூடுதல் செலவின்றி புதிய வசதி தற்போதுள்ள நடைமுறைகளின்படி, புதிய சார்ஜிங் நிலையங்களை அமைக்க கூடுதல் மின் உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது.

அரசின் இந்த புதிய முடிவின் மூலம், கூடுதல் மின் உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய தேவையின்றி, மிக குறைந்த முதலீட்டிலேயே இ.பி சார்ஜிங் வசதிகளை எளிதாக அமைத்துவிட முடியும்.

உயர் மட்ட குழு

அரசின் இந்த சலுகைகள் மற்றும் கொள்கை திருத்தங்கள் மூலம், தமிழ்நாட்டில் மின்வாகன சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.