World News
May 27, 2026 09:31 PM
கனடாவில் தொழிலதிபர்களுக்கு மிரட்டல்; இந்திய வம்சாவளி நபர்கள் 17 பேர் கைது
கனடாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து சென்று குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். இந்த நிலையில், அந்நாட்டில் தெற்காசிய வர்த்தக உரிமையாளர்கள் பலரை, சிலர் கும்பலாக செயல்பட்டு பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.
கனடா, அமெரிக்காவை சேர்ந்த சமூக உறுப்பினர்களும் மிரட்டப்பட்டு உள்ளனர். இதுபற்றி பீல் மண்டல போலீசார் விசாரணை செய்தனர். இதில், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பரில் கனடா போலீசார், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அமெரிக்க எப்.பி.ஐ. அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டு விசாரணையில், கடந்த ஏப்ரலில் 17 பேர் வரை அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
World News